சிறப்புடைய இடுகை

மொழி, பண்பாட்டு வளா்ச்சியில் ‘வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம்’

மொழி , பண்பாட்டு வளா்ச்சியில் ‘ வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம் ’ இரா . மணிகண்டன் XII- ஆ , இரா . விஷ்வா XII- அ , அ . உமா்ஃபார...

செவ்வாய், 17 ஜனவரி, 2017

கவியரசர் முடியரசனாரின் தமிழ் முழக்கத்தில் கலைநுட்பங்கள்
இரா.மணிகண்டன் 11
இரா.விஷ்வா 11
கவியரசர் முடியரசனார் அவைக்களம்,
தே பிரித்தோ மேனிலைப்பள்ளி,
தேவகோட்டை.
முன்னுரை:
கவியரசர் முடியரசனார் தமிழர்களின் கலைப் பண்பாட்டை மீட்டெடுக்க தம் கவிதை வாளைச் சுழற்றிய வீரர் ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரெனும் ஆள்க எனத் துஞ்சாமல் தாய்மொழியின் ஆட்சிக்கும், தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய பாவலர் அவர். 13 கவிதை நூல்கள், 4 காப்பிய நூல்கள், 2 சிறுகதை நூல்கள், 5 கட்டுரை நூல்கள், 1 சிறுகதை நூல் என தம் படைப்புகள் அனைத்திலும் தமிழர் மரபையும், பண்பாட்டையும் காத்திடும் வகையில் மொழிக்கலப்பு, பண்பாட்டுச் சீரழிவு, கலாச்சாரச் சீர்கேட்டிற்கு எதிராய்த் தம் வாழ்நாள் முழுதும் குரலெழுப்பியவர் கவியரசர் முடியரசனார் ஆவார். அரின் கவிதை நூலான ‘தமிழ் முழக்கம்’ நூலில் காணலாகும் கலை நுட்பங்கள் குறித்து இனி இக்கட்டுரையில் காணலாம்.
தமிழ் முழக்கம்:
கவியரசர் முடியரசனார் 1945 முதல் 1980 ஆண்டுகளுக்கிடையே பங்கேற்ற கவியரங்கக் கவிதைகளில் முடியரசனார் தலைமையேற்று முழங்கிய கவிதைகள் மட்டும் தனியே தொகுத்து ‘தமிழ் முழக்கம்’ என்னும் தலைப்பில் முடியரசனாரின் மறைவிற்குப் பிறகு அவரது மூத்த மைந்தர் பாரி முடியரசன் வெளியிட்டுள்ளார். தமிழ் வாழ்த்தோடு சேர்த்து 19 கவியரங்கக் கவிதைகளை உள்ளடக்கியது இந்நூல். 
பாட்டுக் கலை:
தமிழ் முழக்கம் நூலின் தொடக்கமே பாட்டுப் பறவைகள், குயில் பாட்டு என பாடல் குறித்த கவிதைகளாக அமைந்துள்ளன. 
‘பாட்டுப் பறவைகள்’ என்னும் தலைப்பிலமைந்த கவிதைகள் தமிழ்த்தாயை ‘மணிவிளக்கே, தெய்வதமே, எழில் விளக்கே, எழில்மயிலே, பு+ங்குயிலே, நற்றாயே, செழுங்கனியே, யாழிசையே, அமுதசுரபியே, படரொளியே, கவிநலமே, காhpகையே, போர் முரசே, குறவஞ்சியே, மானிடமே, செந்தமிழே, தேன் சுவையே, தௌ;ளமுதே என்று தமிழ்த்தாயின் புகழ்பாடி தாள் பணிந்ததாகக் குறிப்பிடும் கவிஞர் 
பாடு மகனேநீ பாடடா என் புகழை
நீடுதுயில் நீங்கி நிமிர்ந்தெழுந்து பாடடா ;
கேடு தொலைந்ததெனக் கீழ்வான் சிவந்ததென
நாடு சிறந்ததென நாளும்நீ பாடடா ;
வானிற் பறந்துவந்து வட்டமிட்டுப் பாருலகை
மேனின்று பாரடா மேன்மை எல்லாம் பாடடா
(பாட்டுப்பறவைகள், 75-80)
என்று பாட்டுப்பறவை தன்னை தமிழ்த்தாய் பாட அழைத்ததாகக் கவிஞர் பாடுகிறார்.
‘குயில் பாட்டு’ என்னும் கவிதையில் பாரதியாரின் குயில் பாட்டைப் பாடுகிறார்.
‘மாஞ்சோலை வான் கிளையில் வண்ணக் குயிலிருந்து 
தீஞ்சுவையிற் பாடுந் திறந்தினைத்தான் செப்புவனோ?
இன்ப வெறியேறி ஏக்கம் மிகவாகித்
துன்பங் கலந்திருக்கத் தோகைக் குயில்பாடும்
பாட்டின் இயல்பைத்தான் பாடுவனோ?’ (குயில்பாட்டு, 17-21)

என்று குயில் பாட்டின் இன்பத்தைப் புகழ்கிறார்.
‘தென்னாட்டுக் கலைகள்’ என்னும் தலைப்பிலான கவிதையில் தமிழிசைக் கலையின் தோற்றத்தைக் குறித்துப் பாடும் கவிஞர்
‘காட்டில் வளர் மூங்கிலிடைக் கார்வண்டு போய்த்துளைத்த
தோட்டில் நுழைகாற்றுத் தோற்றுவித்த நல்லிசையைக் 
கேட்டான் மனங்களித்தான் ; நாடோறும் கேட்பதற்கு
வேட்டான், எடுத்தான் வெதிரைத் துளைத்தான்
குழல்கண்டான் ; வாயைக் குவித்திசையை ஊதிப் 
பழகி இனிதாக்கிப் பாருக் களித்தவன் யார்?
வேட்டைக் குதவிவரும் வில்லெடுத்து நாண்தொடுத்துப் 
பு+ட்டித் தெறித்தான் புதிய ஒலி கேட்டான் ;
விண்ண் ணெனஇசைத்த ஓசை வியப்பு+ட்டப்
பண்ண் ணிசைக்கும்யாழ் பண்ணி நமக்களித்தான் ; 
வேட்டை யளித்த விலங்கினத்தின் தோலுhpத்து 
மேட்டில் உயர்மரத்தில் வீசி எறிந்துவிட்டான்
காய்ந்தெழுந்த தோலிடத்துக் காற்றால் சிறுகொம்பு
தோய்ந்து தோய்ந் தாடுவதால் தோன்றியதோர் பேரோசை
அன்றே படைத்தான் அளப்பாpய தோற்கருவி’
(தென்னாட்டுக் கலைகள், 43-57)
என்று குழல் இசைக்கருவி, நரம்பிசைக் கருவி, தோல் இசைக் கருவி ஆகிய கருவிகளை நம் முன்னோர் படைத்த விதம் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நாட்டியக்கலை:
ஆடலும், பாடலும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போன்று ஒன்றுக் கொன்று மிகுந்த தொடர்புடையன. நாட்டியக்கலையின் தோற்றத்தைப் பற்றிப் பாடும் கவிஞர்.
‘விண்ணில் தவழ்ந்து விளையாடும் கார்முகிலைக் 
கண்ணெதிhpல் கண்டு களித்தெழுந்த வண்ணமயில் 
தோகை தனைவிhpத்துத் துள்ளிவிளை யாடுகையில்
ஓகை மிகவாக உள்ளந்தான் துள்ளியதால்
அன்றுமுதல் ஆடுகிறான் ஆடுகிறான் அம்பலத்தே’
(தென்னாட்டுக் கலைகள், 73-77)
என்று இயற்கையிலிருந்து கற்றுக்கொண்ட பட்டறிவின் மூலம் இசைக்கருவிகளைத் தமிழர் உருவாக்கியது போல் பழந்தமிழர் ஆடற்கலையையும் இயற்கையிலிருந்தே கற்றுக் கொண்டனர் என்று கவியரசர் சுட்டிக் காட்டுகிறார்.  
‘செஞ்சொற் சிலம்பு’ என்னும் கவிதையில் சிலப்பதிகாரம் நாட்டியல் நூல் என்பதற்கு அரண் சேர்க்கும் வகையில்
கூத்தும் இசையுங் குறிக்கும் இயல்பனைத்தும்
பாத்துப் பகர்ந்தணிசேர் பாவில் அரங்கேற்றும் ; 
அன்பின் விளைந்த அகப்பொருளின் நற்றுறைகள்
இன்பில் அமைந்தங் கிடையிடையே கொஞ்சிவரும்
(செஞ்சொற் சிலம்பு, 55-58)   
என்று நாட்டிய அரங்கேற்றம் பற்றிப் பாடுகிறார்.
கட்டடக்கலை:
நம் தமிழர்களின் கட்டக்கலை உலகப் புகழ் பெற்றதும் கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குவதும் ஆகும். கட்டடக்கலையின் நுணுக்கத்தைக் கவியரசர் ‘வான முகட்டில் ஏறுவதற்கு ஏணிவைத்து வழி சமைத்தது போல் தோன்றுகின்ற கோபுரங்கள், மாடங்கள், மாளிகைகள், மாற்றுயர்ந்த பொன் வேய்ந்த கூடங்கள், கொற்றவர்கள் கூடும் அரண்மனைகள், யானைப்படை சென்று வரும் அகன்ற உயாpய வாயில்கள், பகைவர்கள் புகமுடியாத பொpய மதில்கள் என இவையனைத்தும் தமிழர்களின் கட்டட நுண்கலைக்குச் சான்றாகும்’ என்று கவியரசர் குறிப்பிடுகிறார். தஞ்சை பொpய கோவிலின் கட்டடக்கலையைக் கண்டு வியப்புறும் கவிஞர்
‘விஞ்சும் எழிலால் வியப்பு+ட்டும் கோபுரத்தைத் 
தஞ்சைப் பெரும்பதியில் தந்தமன்னன் சாய்ந்துவிட்டான்
ஆக்கிப் படைத்தானே அன்னவனும் சாய்ந்து விட்டான் ;
தேக்குபுகழ் மட்டும் தினையளவும் சாயவில்லை ;
கோபுரத்தில் காணும் கொடுமுடியின் தன்னிழலும்
ஓர்புறமும் சாயவில்லை ; ஒப்பில்லை இக்கலைக்கே
(தென்னாட்டுக்கலைகள், 33-38)
என்று கட்டடக் கலை நுட்பத்தை வியந்து பாடுகின்றார்.
நெய்தற்கலை:
உழவும், நெசவும் பன்னெடுங்காலமாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொழில்கள் ஆகும். உழவு நம் உயிர் காப்பது; நெசவு நம் மானம் காப்பது. உயிரையும், மானத்தையும் காத்த தொழில்கள் உலகமயமாக்கலில் நசிந்துவரும் சு+ழலில் எத்தனை இடர்வந்தாலும் அவற்றை வழிவழியாய்ச் செய்துவரும் தமிழர்களைப் பாராட்டும் கவிஞர்
பாலாவி என்றிந்தப் பாரோர் புகழ்ந்தேத்த
நூலாலே ஆடை நொடியிற் படைத்திருந்தோம் ;
பாவோ டிழையாடப் பஞ்சாலும் பட்டாலும்
ஓவா துழைத்தே உயர்ந்த கலைகண்டோம் ;
நெய்தற் கலையாவும் நெய்தல் உhpப்பொருளாய்
எய்தாமல் இன்றும் இயக்கி வருகின்றோம்
(தென்னாட்டுக்கலைகள், 93-98)
என்று நெய்தலின் உhpப்பொருளான ‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’ நெய்தல் கலை அடைந்துவிடாமல் நெய்தல்கலையைக் காத்துவரும் நெசவுத் தொழிலாளர்களைப் பாராட்டுகிறார்.
இலக்கியக்கலை:
‘நுணுக்கமும் அழகுங்கொண்டு உள்ளத்தைத் தன் வயப்படுத்துவதெல்லாம் கலை என்றால் கவிதையும் அதனுள் அடங்குவதுதான். படைப்பிற்குப் பின்னும் தன்னை நுகர நுகர அழகு வளர்பிறை போல் வளர்ந்து செல்லும் கவிதை போன்ற கவின் பொருள்களின் படைப்பு முறையைக் கலை என்று தான் சொல்ல வேண்டும்’ என்பர் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி (கவிதைக்கலை, வள்ளுவர்பண்ணை, மார்ச்சு 1962, ப.66) அத்தகைய கவிதைக்கலையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது
கல்லைக் கலையாக்கிக் காடெல்லாம் வீடாக்கிச் 
சொல்லிற் சுடரேற்றிச் சொல்லாpய காவியமென்
றாக்கிப் படைத்தான், அருங்கலைகள் ஆற்றலெலாம்
தேக்கிப் படைத்தான், தெளிதமிழின் பெட்டகம்போல் 
காதல் சுவைத்திருக்கக் கண்டான் அகமென்று ;
மோதும் பகைக்களத்து மூள்வோர் புறங்கண்டான் ;
தீது சிறிதுமிலாத் தென்னாட்டான் நம்நாட்டான்
ஆயுங் கலைகள் அனைத்தும் பெருக்கி நலம்
தோயும் படிவாழ்வைத் துய்த்திருந்தான்;
(தென்னாட்டுக் கலைகள், 99-108)
என்று அகவிலக்கியம், புற இலக்கியமென்று வகைமை பிhpத்து இலக்கியக் கலை படைத்து வாழ்ந்த தமிழாpன் கலை, பண்பாட்டுச் சிறப்பைப் போற்றுகிறார் கவியரசர் முடியரசனார்.
முடிவுரை:
கவியரசர் முடியரசனாரின் ‘தமிழ் முழக்கம்’ நூலில் மட்டுமன்றி அவர்தம் படைப்புகள் அனைத்திலும் பண்பாட்டு, கலைச் சிறப்புகள் குறித்த கருத்துகள் விரவியுள்ளன. பழந்தமிழகத்தின் பண்பாட்டுச் சிறப்புகளை, கலைநுட்பங்களை மறுபதிவு செய்யவேண்டும் ; மீட்டெடுக்க வேண்டும் ; அழிந்துபோக விடாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்ற கவியரசர் முடியரசனாரின் வேண்டுகோளுக்கு செவிமடுப்போம். கலை, பண்பாட்டைக் கண் போல் காத்து நிற்போம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக