சிறப்புடைய இடுகை

மொழி, பண்பாட்டு வளா்ச்சியில் ‘வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம்’

மொழி , பண்பாட்டு வளா்ச்சியில் ‘ வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம் ’ இரா . மணிகண்டன் XII- ஆ , இரா . விஷ்வா XII- அ , அ . உமா்ஃபார...

புதன், 2 ஆகஸ்ட், 2017

மொழி, பண்பாட்டு வளா்ச்சியில் ‘வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம்’

மொழி, பண்பாட்டு வளா்ச்சியில்வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம்
இரா.மணிகண்டன் XII-,
இரா.விஷ்வா XII-,
.உமா்ஃபாருக் IX-,
வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம்,
தே பிரித்தோ மேனிலைப்பள்ளி,
தேவகோட்டை.
முன்னுரை:

            ‘இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும், போக்கும்என்னும் பொதுத் தலைப்பில் அமைந்த இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் எங்கள் பள்ளியில் இயங்கி வரும் வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம் 2008 முதல் 2017 வரை பத்தாண்டுகளாகச் செய்துவரும் மொழி, பண்பாட்டு வளா்ச்சிப் பணிகளைப் பற்றி இனி  இக்கட்டுரையில் காணலாம்.
வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம்:
            தேவகோட்டை தே பிரித்தோ மேனிலைப் பள்ளியில் இயங்கி வரும் மாணவா்களுக்கான தமிழ் இலக்கிய மன்றம் அயல்நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து அளப்பரிய தமிழத்தொண்டாற்றிய வீரமாமுனிவரின் பெயரைத் தனக்குச் சூட்டியுள்ளது.  2008 முதல் பட்டதாரி தமிழாசிரியா் திரு..ஸ்டீபன் மிக்கேல் ராஜ் இம்மன்றத்தின் பொறுப்பாசிரியராகவும், செயலராகவும் செயல்பட்டு வருகிறார்.  6முதல் 12 வகுப்பு வரையிலான கலை இலக்கிய ஆர்வமுள்ள மாணவா்கள் இதில் உறுப்பினா்களாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

கலைவாரவிழா:
            எம் பள்ளியில் ஒவ்வோராண்டும் சூலைத் திங்கள் முதல் வாரம்கலைவார விழா’  வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றத்தால் கொண்டாடப்படுகின்றதுபேச்சு, கவிதை, கட்டுரை, கவிதை ஒப்பித்தல், பாட்டு, ஓவியம், பண்பாட்டு இசைக்கருவி வாசித்தல், கிராமிய நடனம், கதை சொல்லல், படித்ததைப் பகிர்தல், தனிநடிப்பு, குறுநாடகம், பட்டிமன்றம்  போன்ற இருபது விதமான போட்டிகள் நடத்தப் படுகின்றனவிழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினா்களோடு மாநில அளவில் அந்தந்த ஆண்டுகளில் கலைத்திறன்களில் சாதனை புரிந்த மாணவா்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி கலைவாரவிழாவைத் தொடங்கிவைப்பது தனிச்சிறப்பு உடையதாகும்கலைவாரவிழாவில் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டவா்களில் தி இந்து தமிழ் தலைமை உதவி ஆசிரியா், ஹைக்கூ கவிஞா் மு.முருகேஷ் (விழாவில்ஹைக்கூ அடா்விருது வழங்கப் பெற்றது) ‘காக்கைச் சிறகினிலே’  ஆசிரியா் இரா.எட்வின், பாடலாசிரியா் நாகை.நாகராஜன், எழுத்தாளர் பாரிமுடியரசன், பேரா..தேனப்பன் போன்றோர் குறிப்பிடத்தக்கோர் ஆவா்இவ்வாண்டு 03.07.2017 அன்று நடைபெற்ற கலைவாரத்துவக்க விழாவில் இலக்கிய மன்ற முன்னாள் மாணவா்களான அய்க்கஃப் பேரியக்கத்தின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளா் .இனியன், அழகப்பா பல்கலைக்கழகத்தின் குறும்படப் போட்டியில் முதல்பரிசு வென்ற குறும்பட இயக்குநா் &  நடிகர் து.மணிகண்டன் (விழாவில்கலைச்செல்வா்பட்டமளிக்கப் பெற்றது) ஆகியோர் பங்கேற்றனா்.
கலை இலக்கியப் பயிலரங்கம்:
          மாணவா்களிடையே மொழிப்பற்றினை வளா்க்கவும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்களைப் போற்றிக் காக்கவும், பாரம்பரியக் கலைகளை, இலக்கியச்  செல்வங்களை மாணவா்களுக்குப் பயிற்றுவிக்கவும் ஆண்டுதோறும் கலை இலக்கியப் பயிலரங்கம் நடைபெற்று வருகின்றது.
            மகாகவி பாரதி அரங்கம், புரட்சிக்கவி பாரதிதாசன் அரங்கம், வீறுகவி முடியரசன் அரங்கம் போன்ற தனித்தனி அரங்குகளில் மாணவா்களுக்குப் பயிலரங்குகள் நடத்தப் பெறுகின்றன.
உறுதிமொழியேற்பு:
          இலக்கிய மன்றத்தில் உறுப்பினா்களாகச் சேரும் ஒவ்வொருவரும் கலை இலக்கியப் பண்பாட்டு உறுதிமொழி பத்தும் ஏற்க வேண்டியது கட்டாயம்.  அவையாவன:
          1.என் வாழ்நாள் முழுவதும் என் தாய்மொழிக்கும், பண்பாட்டிற்கும் கலைகளுக்கும் பாதுகாவலனாய் இருந்து போற்றிப் பாதுகாத்திடுவேன்.
            2. பிறமொழிக் கலப்பின்றி இயன்றவரை தூய தமிழில் பேசுவேன்.
            3. தாய்மொழிக்கும், தாய் நாட்டிற்கும் ஆக்கம் தருவனவற்றையே நாடிச் செல்வேன்.
            4. தமிழிலேயே கையெழுத்திடுவேன்.   தலைப்பெழுத்தையும் தமிழில்தான் எழுதுவேன்.
            5. வீட்டு முகவரியைத் தமிழிலேயே எழுதுவேன்.
            6. இலக்கியங்களையும், கலைகளையும் விருப்பமுடன் கற்றுக்கொள்வேன்.
            7. என் பேச்சிலும், எழுத்திலும், செயலிலும் தமிழ் மொழிக்கும், தமிழ்ப்பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்ந்திட முனைந்திடுவேன்.
            8. சாதி, மத வேற்றுமைகளைப் பாராமல்தமிழன்என்ற உணா்வுடன் பொதுமை படைத்திட முயன்றிடுவேன்.
            9. தமிழ் மொழி, தமிழா் இனம், தமிழ்நாடு ஆகியனவற்றிற்கு பொதுமை படைத்திட முயன்றிடுவேன்.
            10. தமிழுக்குத் தொண்டாற்றிய முன்னோர்களைப் போற்றி நடந்து அவா்களின் புகழைப் பரவச் செய்திடுவேன்
என்பனவாகும்.
இதழ், நூல்கள் வெளியீடு:
          வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வெளியீடுகள் விவரம் பின்வருமாறு:
            1. மேடை நமதே.. (அரியவைநூறு: தொகுப்புநூல்) -திரு..ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (தினத்தந்தி, ஆனந்த கங்கை தூது இதழ்களின் பாராட்டு பெற்றது).
            2. மொட்டுகளின் வாசம் (ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூல்) - 26 மாணவா்களின் 74 ஹைக்கூ கவிதைகள் (குங்குமம், புதிய தலைமுறைகாக்கைச் சிறகினிலே, இனிய நந்தவனம், கல்விடுடே, உண்மை ஆகிய இதழ்களிடம் பாராட்டு பெற்றது)
            3. சுழல் சிற்றிதழ் - தே பிரித்தோ மேனிலைப் பள்ளி ஆசிரியா்கள் (பொறுப்பாசிரியா் - திரு..ஸ்டீபன் மிக்கேல் ராஜ்) (குங்குமம், புதிய தலைமுறை, காக்கை இதழ்களிடம் பாராட்டு பெற்றது)
            4. சமூகமே எந்திரி - பதினோராம் வகுப்பு மாணவா்களின் சிற்றிதழ் (தற்பொழுது கல்லூரியில்  பயிலும் அம்மாணவா்களின் இதழினை 28.06.2017 அன்று முதுபெரும் பத்திரிகையாளா், தமிழக அரசின் கண்ணதாசன் விருதாளா், தென்றல், முல்லை, திராவிட நாடு, முத்தாரம் இதழ்களின் துணையாசிரியா், தமிழ் நாடு நூலக ஆணையக்குழு முன்னாள் தலைவா் திரு. கயல் தினகரன் அவா்கள் வீறுகவி முடியரசனார் விழாவில் வெளியிட்டார்)
            5. பேனா முனை - பத்தாம் வகுப்பு மாணவா்களின் சிற்றிதழ் (மாணவா்களின் சிற்றிதழ்கள் குறித்து புதிய தலைமுறை, காக்கைச் சிறகினிலே, உண்மை ஆகிய இதழ்கள் மூன்று பக்க அளவில் கட்டுரைகள் வெளியிட்டனஇவ்விதழ்கள் குறித்து கியூபா பதிப்பகம் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது)
            6.வோ்களே விழுதாகி...அருட்திரு.  Y.S.யாகு சே.. (முன்னாள் தலைமையாசிரியா் & வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றத் தவைா்)
            7. உளிகள் வடித்த துளிகள் (கட்டுரை நூல்) - தே பிரித்தோ மேனிலைப்பள்ளி ஆசிரியா்கள் (பொறுப்பாசிரியா் - கவிஞா் எல். பிரைட்)            சுட்டிவிகடன், தினத்தந்தி, புதிய தலைமுறை இதழ்களிடம் பாராட்டு பெற்றது.
            8. பாப்பா பாடும் பாட்டு (குழந்தைப் பாட்டிலக்கிய நூல்) - கவிஞா் எல். பிரைட் (பட்டதாரி அறிவியல் ஆசிரியா்) - சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசை அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழத்திடம் பெற்ற நூல்.
            9. மாடல்ல மற்றை யவை.. (சிறுகதைத் தொகுப்பு) - திரு..ஸ்டீபன் மிக்கேல் ராஜ்  (ஆசிரியரின் பதினாறு கதைகளுக்கான ஓவியங்களும், அட்டைப்பட ஓவியமும் இலக்கிய மன்ற மாணவா்களால் வரையப் பெற்றவைதினத்தந்தி, புதுவை பாரதி, ஆனந்த கங்கை தூது இதழ்களிடம் பாராட்டு பெற்றது)
தமிழ் வளா்ச்சித் துறை பரிசுகள்:
Ø  2008 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை நடத்திய மாவட்ட அளவிலான போட்டிகளில் வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்ற மாணவா்கள் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பெற்று மாநிலப் போட்டியில் பங்கேற்றனர்.
Ø  2011 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் .பாண்டித்துரை இரண்டாம் பரிசு பெற்றார்.
Ø  2016 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசினை இரா.விஸ்வா தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலா் இரா.வெங்கடேசன் .. அவா்களிடமிருந்து உரூ.பத்தாயிரம் பரிசு பெற்றார்கவிதைப் போட்டியில் பூ.சந்திரசேகர் இரண்டாம்பரிசு ஏழாயிரம் உரூபாயை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி அவா்களிடம் பெற்றார்மேலும் மாநில அளவிலான தமிழ்வளா்ச்சித்துறை பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசு உரூ.பத்தாயிரம் இரா.விஸ்வா வென்றுள்ளார்.
            கடந்த ஆண்டு கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் எம் இலக்கிய மன்ற மாணவா் மு.இராகவேந்திரன் மாவட்ட அளவில் ஏழாயிரம் உரூபாய் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது.
            தமிழ் வளா்ச்சித் துறைப் போட்டிகளில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ஆட்சிமொழிக் கருத்தரங்கிலும் பங்கேற்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்குநா் முனைவா் கோ.செழியன் அவா்களிடமும், நல்லாசிரியா் தமிழ்ப்பெரிய சாமி ஆகியோரிடம்  பாராட்டு பெற்றுள்ளனர்.
தமிழா்திருநாள் கொண்டாட்டம்:
            ஒவ்வோராண்டும் தை-1 தமிழ்ப்புத்தாண்டு, தமிழா் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டுகின்றதுஇவ்வாண்டுஇன்றைய தமிழா்கள் மீட்டெடுக்க  வேண்டியவை உரிமைகளா? உறவுகளா?’  என்னும் தலைப்பில் மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்று நடத்திய பட்டிமன்றம் உள்ளுர்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியதுதமிழா் திருநாளை முன்னிட்டுப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இலக்கிய அமைப்புகளில் மாணவா்கள்:
            காரைக்குடி வள்ளுவா் பேரவை, வீறுகவிமுடியரசன் அவைக்களம், தேவகோட்டை தமிழ் இலக்கியப் பேரவை, திருவள்ளுவா் தமிழ் மன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞா்கள் சங்கம்பாரதி கலை இலக்கியப்  பெருமன்றம், கே.யெம்.எஸ் சிந்தனைச் சோலை போன்ற இலக்கிய அமைப்புகளில் உறுப்பினராகக் சேர்ந்து இலக்கிய கூட்டங்களில் பங்கேற்றும், பேசியும், கவிதை  வாசித்தும், நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும் இலக்கியப் பணிகளில் மாணவா்பருவத்திலிருந்தே தங்களை  ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனா்லிம்கா சாதனை, உலக சாதனைக் கவியரங்குகளிலும் பங்கேற்று கவிதை வாசித்துள்ளனா்.
ஊடகங்களில் மொழி வளா்ச்சி:
            விகடன் இதழ்குழுமத்தின் உறுப்பு இதழான சுட்டிவிகடன் இதழில் மாணவா் பத்திரிகையாளா்களாக சித.உலகப்பன் (2010), வீ.குமாரவேல் (2011),  செ.தீபக்ராஜா (2012-மாநில அளவிலான சிறந்த பங்களிப்பிற்காகசூப்பா் சுட்டி ஸ்டார்பட்டம் வென்றவா்),    .சிவசுப்பிரமணியன் (2013).  இரா.விஸ்வா (2015), .பாஸ்டின் ஜோயல் (2016), .உமா்ஃபாருக் (2017) ஆகியோர் தேர்வுசெய்யப்பெற்று பிறமொழிச் சொல்  கலவாத  தூய தமிழ் நடையில் எழுதி வருகின்றனா்.
            சன், ராஜ், ஜெயா, கேப்டன், கலைஞா், தமிழன், மக்கள், புதுயுகம், வேந்தா் போன்ற தொலைக்காட்சிப் பேச்சரங்குகளில் .அஜித்குமார், சுப.மணிமாறன், இரா.மணிகண்டன், மு.இராகவேந்திரன், இரா.விஸ்வா, .பொ்னால்டு ஜார்ஜ் ராஜ் போன்ற மாணவா்கள் பங்கேற்று தாய்மொழி, தமிழா் பண்பாடு குறித்துப் பேசி உலக அரங்கில்  உயா்தமிழுக்கு ஆக்கம் தேடித்தந்துள்ளனா்இவா்களுள் இரா.மணிகண்டன் பேசிய பாமர மக்களின் பேச்சுத் தமிழ் காணொலி தளத்தில் பத்து இலட்சம் பார்வையாளா்களை ஈா்த்துள்ளது (https://youtu.be/Ct629bnDS0s). இக்காணொலியைப் புலனத்தில் பார்த்து மகிழ்ந்த முன்னாள் காவல் துறைத் தலைவா் சிவனாண்டி .கா. பள்ளிக்கு நேரில் வந்து மாணவனைப் பாராட்டியுள்ளார்.  தமிழன் தொலைக்காட்சியின் மாநில அளவிலானதமிழன் மாணவா் விருதுகள் - 2016’-க்கு மக்கள் பேச்சாளா் மாணவா், மக்கள் எழுத்தாளா் மாணவா், இளம் விஞ்ஞானி போன்ற பிரிவுகளுக்கு  இலக்கிய மன்ற மாணவா்கள் மூவா் தோ்வு செய்யப்பெற்று விருதுகளைப் பெற்றுள்ளனா். (கல்விடுடே, மார்ச் 2017, .5)
முடிவுரை:

            பள்ளிக் கூட அளவிலான சிறு அமைப்பாகவீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம்’  இருந்து வளரும் தலைமுறைக்கு மொழி கலை இலக்கியம் - பண்பாடு ஆகியனவற்றின் மீதான பற்றை வளா்க்கும் பணியில் வீறுநடை போட்டுச் செல்கிறது. சிறுசிறு முயற்சிகளே பெரிய பெரிய வெற்றிக்குக் காரணமாக அமையும் என்பதால் வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றத்தின் மொழி-பண்பாட்டு வளா்ச்சிக்கான சிறு சிறு முயற்சிகளும் போற்றுதற்குரியவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக