இதழியல் பார்வையில் வீரமாமுனிவர் கலைஇலக்கிய மன்றத்தின் கலைப்பணிகள்
அ. கரியமாணிக்கம் 11,
ஆ.குப்பமுத்து 11,
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், தே பிரித்தோ மேனிலைப்பள்ளி,
தேவகோட்டை.
முன்னுரை:
பண்டைத் தமிழர்களின் வாழ்வியலோடு வாழ்வியலாய் இணைந்திருக்கும் பண்பாட்டு விழுமியங்களை, கலைச் சிறப்பை கடந்த கால வரலாற்றின் வழி மீட்டுருவாக்கம் செய்து, நிகழ்காலத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டியது இன்றைய காலக்கட்டத்தின் அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. நம் முன்னோர்களின் பண்பாட்டையும், மரபையும் பள்ளிப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டிய பொறுப்பு பள்ளிகளுக்கு இருக்கிறது. அவ்வகையில் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் தமிழர் பண்பாட்டையும், கலைகளையும் காக்க முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்து இதழியல் பார்வையில் இனி இக்கட்டுரை வழி காணலாம்.
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்:
தேவகோட்டையில் தே பிரித்தோ மேனிலைப் பள்ளி 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பயின்றவர்களுள் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மேனாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், நீதியரசர் முருகேசன், ஆசிய தடகள தங்கப் பதக்க வீரர் சார்லஸ் புரோமியோ, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்ரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மலைச்சாமி, திரைப்பட நடிகரும், மேனாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். 1990 முதல் இப்பள்ளியில் இயங்கி வரும் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தில் தமிழாசிரியர்கள் திரு.ச.அமல்ராஜ், திரு.அ.பௌலியன்ஸ் ஆகியோர் செயலர்களாகப் பொறுப்பு வகித்துள்ளனர். 2009 முதல் பட்டதாரிதமிழாசிரியர் திரு.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் செயலராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இம்மன்றத்தின் தலைவராக தலைமையாசிரியர் பொறுப்பிலிருக்கும் இயேசுசபை அருட்தந்தையர் செயல்பட்டு வருகிறார்கள். தற்பொழுது இம்மன்றத்தின் தலைவர் அருட்திரு.வே.அகஸ்டின் ஜான்பீட்டர் சே.ச.ஆவார். ஆறு முதல் பன்னிரண்டு வகுப்பு வரை பயிலும் கலையாற்றலும், இலக்கிய ஆர்வமும் கொண்டுள்ள மாணவர்கள் இதன் உறுப்பினர்களாவர்.
கலைவார விழா:
ஆண்டுதோறும் சு+லைத் திங்களில் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் கலைவார விழா ஒரு வாரம் முழுதும் திருவிழா போல கொண்டாடப் பெறும். இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பிரிவுகளுக்கெனத் தனித்தனியே தனி நடனம், கிராமிய குழு நடனம், கிராமியப் பாடல், இசைக்கருவி வாசித்தல், பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், தனி நடிப்பு, குறு நாடகம், மௌன நாடகம், பயனற்ற பொருள்களிலிருந்து கலைப்பொருட்கள் தயாரித்தல், கையெழுத்து, பட்டிமன்றம், சமையல் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப் பெறும். முந்தைய ஆண்டுகளில் கலைத் திறன்களில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைவாரத் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து, குத்துவிளக்கேற்றி வைக்கும் மதிப்பான வாய்ப்பு வழங்கப்படுகிறது. நிறைவு விழாவில் முதல் மூன்றிடங்களை வென்ற மாணவர்களுக்கு கலைத்துறை சாதனையாளர்கள் மூலம் பரிசுகள் அளிக்கப் பெறும்.
கலைப் போட்டிகள்:
காந்தியன் சமுதாய கிராம சங்கமும், தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்தும் கலைப் போட்டிகளையும் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகளையும் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
கலை இலக்கியப் பயிலரங்கம்:
பழந்தமிழர்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு ஆகியனவற்றை அறிந்து கொள்ளும் பொருட்டு தொன்மைப் பாதுகாப்பு மன்றத்துடன் இணைந்து பழங்காலப் பொருட்களை சேகரித்து கண்காட்சி நடத்திவருகிறது. அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் கருத்தரங்குகளில் மாணாக்கரைப் பங்கேற்கச் செய்தும், பண்பாட்டு புழங்கு பொருட்கள் கண்காட்சியில் ஈடுபடச் செய்தும் வருகிறது.
முன்னாள் மாணவர் மன்றத்துடன் இணைந்து தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, கவியரசர் முடியரசனார் பிறந்த விழா, மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா ஆகிய விழாக்களை முன்னிட்டு ஒரு நாள் கலை இலக்கியப் பயிலரங்கம் நடைபெற்றது. பாரதியார் அரங்கம், பாரதிதாசன் அரங்கம், முடியரசன் அரங்கம் ஆகிய அரங்குகளில் பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட கலைகளை வளர்த்தெடுக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன (தினமணி, 16.10.2016 ,தினத்தந்தி, 16.10.2016)
கிராமியக் கலை நடனங்கள்:
2013, 2016 ஆண்டுகளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை விழாக்களில் ‘தொன்மங்களின் தோரணம்’ என்ற தலைப்பில் கயிறுநடனம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நடனங்களை வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்ற மாணவர்கள் மேடையேற்றி வருகின்றனர் (ஆண்டுவிழா ஆண்டறிக்கை, 2012-13 ப.8) தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய கிராமிய நடனப் போட்டியில் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் இவ்வாண்டு கரகாட்டம் ஆடி முதல் பாpசு வென்றனர்.
கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், சிலா ஆட்டம், களியல் ஆட்டம், சக்கைகுச்சியாட்டம், வெசில் ஆட்டம் ஆகிய பல்வேறு கிராமிய நடனங்களை ஆசிரியர்கள் திரு.லூ.ஜஸ்டின் பிரபாகரன், திரு.சு+.ரிச்சர்டு ஆகியோர் கற்றுத்தருகின்றனர்.
கவிதைக்கலை:
கலை இலக்கியப் பயிலரங்கில் மரபுக் கவிதை, புதுக்கவிதை நறுக்கு ஆகிய கவிதைகள் எழுத பயிற்சியளிக்கப்படுகிறது. ராஜ் தொலைக்காட்சியின் ‘புதியதோர் கவிஞன் செய்வோம்’ நிகழ்ச்சியில் இலக்கிய மன்றச் செயலர் ம.ஸ்டீபன் மிக்கேல்ராஜ், மாணவர் சுப.மணிமாறன் கவிதை பாடியுள்ளனர். கோவை தமிழ்ச்சங்கம் நடத்திய உலக சாதனைக் கவியரங்கில் கலை இலக்கியமன்ற மாணவர்கள் உலகப்பன், சந்திர சேகர், ஸ்டீபன், மணிமாறன் பங்கேற்று கவிதை வாசித்தனர் (தினத்தந்தி, 22.12.2011)
காரைக்குடியில் வள்ளுவர் பேரவை நடத்திய லிம்கா சாதனைக் கவியரங்கில் இம்மன்றத்தின் சார்பில் இருபது மாணவர்கள் பங்கேற்று கவிதை வாசித்தனர். (சுட்டி விகடன் 15.11.20101, ப.57)
பள்ளியின் 69 ஆம் ஆண்டு விழாவில் இலக்கிய மன்ற மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் ‘மொட்டுகளின் வாசம்’ என்னும் நூலாக வெளியிட்டது. பல்வேறு பத்திhpகைகள் பாராட்டி கட்டுரை வெளியிட்டன, அவற்றுள் சில:
*‘சதா சர்வ காலமும் மாணவர்களை புத்தகத்துக்குள் முடக்கிப் போடுகிற பள்ளிகள், ஒரு எட்டு தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று பாடம் படித்துவிட்டு வர வேண்டும். மாணவர்களை படிப்பாளியாக மட்டுமின்றி படைப்பாளியாகவும் மாற்றுகிற அரும்பணியைச் செய்கிறது. ‘வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்’ என்ற பெயாpல் ஒரு இலக்கியப் படை இங்கு இயங்குகிறது. புதுக்கவிதை, ஹைக்கூ, சிறுகதை என்று பல பாpமாணங்களில் கலக்கி பாகசுகளையும், விருதுகளையும் குவிக்கும் மாணவர்கள் கவியரங்கங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்துகிறார்கள். ஜனரஞ்சக இதழ்கள் மட்டுமன்றி சிற்றிதழ்களிலும் எழுதிக்குவிக்கிறார்கள்.
மாணவர்களின் மொட்டுகளின் வாசகம் என்ற நூலில் குறுகத்தாpத்த குறள்போல கருத்தை ஈர்க்கின்றன கவிதைகள் (குங்குமம், 19.11.2012, பக்.84,85)
* ஒரே பள்ளி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூலை வெளியிடுவதில் மாநில அளவில் புதிய முயற்சியாக வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் வெளியிட்டதை ‘கல்விச் சுரங்கம்’ பாராட்டி மகிழ்கிறது. (கல்விச் சுரங்கம், நவம்பர் 2012, ப.37)
* ஆண்டு விழாவென்றால் சினிமாப் பாடல்களைப் போட்டு நடனமாடவைத்து வேடிக்கை பார்ப்பதைவிட இது போன்று ஆக்கபு+ர்வமாக மாணவர்களை ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் செயல்பட வைத்தால் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியுமென்பதற்கு தே பிரித்தோ மேனிலைப்பள்ளி முன்னுதாரணமாய்த் திகழ்கிறது. (இனிய நந்தவனம், டிசம்பர் 2012)
எ மனித அழிமானத்திற்கான எல்லா விதமான கூறுகளும் தலையெடுக்கத் துவங்கிவிட்ட இந்தத் துயரம் நிரம்பிய காலகட்டத்தில் அரவமின்றி மாணவர்களை ஆகச்சிறந்த சமூக சக்திகளாய் உருமாற்ற வழிகாட்டியும், திறன் ஊட்டியும் வளர்த்தெடுக்கும் பணியைச் செய்கின்ற தே பிரித்தோ மேனிலைப்பள்ளி தம் எதிர்கால வரலாற்றை இன்றே மாணவ உளிகொண்டு எழுதிக் கொண்டிருக்கிறது. இது எக்காலத்தையும் விஞ்சி நிற்கும் தான். (புத்தக மதிப்புரை - கவியோவியத் தமிழன் - சுழல், ஏப்ரல் 2013, ப.05)
கடிதம் - கட்டுரை -சிறுகதை:
கடிதக்கலை பற்றிய சிறப்புகளை மடல் என்னும் சிற்றிலக்கியத்திலும், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்கள் மூலமாகவும் அறிய முடிகிறது. இன்றைய அறிவியல் தொழில் நுட்ப யுகத்தில் கடிதமெழுதுவது அருகிவரும் சு+ழலில் மாணவர்களுக்குக் கடிதமெழுதக் கற்றுத்தருகிறது வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்.
கடிதமெழுதும் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் இலக்கியமன்ற மாணவர்கள் வாகை சு+டியுள்ளனர். ‘என் கனவு ஆசிரியர்’ என்னும் தலைப்பிலான கடிதப் போட்டியில் அ.கரியமாணிக்கம் முதலிடம் வென்றுள்ளார் (தினமலர், பட்டம், 10.10.2016, ப.7)
கவின்கலைகளுள் கட்டுரையும் ஒன்று. பத்திரிகைகளுக்கு வரலாற்றுக் கட்டுரை, ஆய்வுக் கட்டுரை, நேர்காணல் கட்டுரை போன்ற கட்டுரைகளை மாணவர்கள் எழுதி வருகின்றனர்.
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகம் நடத்திய மாவட்ட அளவிலான போட்டியில் சி.சேதுராஜா முதல் பரிசு வென்றுள்ளார் (தினமணி, 04.11.2013, தினமலர் 06.11.2013) பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கட்டுரைப் போட்டியில் ஆ.குப்பமுத்து, தி இந்து தமிழ் நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் சு+.ஆரோக்கியஜெகன் (தி இந்து, மாயாபஜார், அக்டோபர் 21,2015) பரிசு பெற்றுள்ளனர். 28.11.2016 அன்று கோவையில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் 12 மாணவர் சிவசுப்பிரமணியன் இரண்டாம் பரிசினை பள்ளிக்கல்வித்துறை இயக்குடம் பெற்றுள்ளார்.
சிறுகதை எழுத இலக்கிய மன்றத்தின் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. கலை இலக்கிய மன்ற மாணவர்கள் எழுதிய சிறுகதைகள் பல்வேறு பத்திhpகைகளில் வெளியாகியுள்ளன. சுட்டி விகடன் மாணவ நிருபர் சித.உலகப்பன், எம்.ஆண்டனி ஜாக்சன் ஸ்ரீதர் ஆகியோர் சிறுகதைகள் (சுட்டி விகடன் 31.10.2010, ப.58) இவ்வாண்டுக்குhpய சுட்டி விகடன் மாணவ நிருபர் ஆ.பாஸ்டின் ஜோயல் சிறுகதை (சுட்டி விகடன் 29.02.2016, ப.62,63) ஆகியன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் ம.ராகுல், து.தேவராஜ் சிறுகதைகள் வெற்றி பெற்று பரிசு வென்றுள்ளன (தினமலர், பட்டம், 11.04.2016)
ஓவியக்கலை:
கலைவார விழாவில் ஓவியப்போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ஓவிய ஆசிரியர்கள் திரு.ஜா.சேவியர், திரு.ஜா.பு+ண்டி ஜெயராஜ் ஆகியோரைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது.
2016-17 கல்வியாண்டில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய ஓவியப் போட்டியிலும், பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகளிலும் ஜ.பெர்னால்டு ஜார்ஜ் ராஜ் முதல் பாpசினை வென்றுள்ளார்.
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றச் செயலர் திரு.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் எழுதிய ‘மாடல்ல மற்றை யவை..’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு அட்டைப்படம், பதினாறு சிறுகதைகள் உள்ளிட்ட பதினேழு ஓவியங்களை கலை இலக்கிய மன்ற மாணவர்களே வரைந்துள்ளனர். (ஆனந்த கங்கைத்தூது, மார்ச் 2015)
மாநில அளவில் சிறந்த ஓவியங்களாகத் தேர்வு செய்யப்பட்ட எட்டு ஓவியங்களில் நான்கு ஓவியங்கள் இம்மன்ற மாணவர்களுடையவை. (பாவையர்மலர், செப்டம்பர் 2015, ப.44.45)
இதழியல்கலை:
இதழியல் கலை குறித்த வகுப்புகளும் கலை இலக்கிய மன்றத்தின் மூலம் நடத்தப் பெறுகின்றன. விகடன் இதழ் குழுமத்தின் சிறார் இதழான சுட்டி விகடன் பத்திhpகையில் சித.உலகப்பன் (2010), வீ.குமாரவேல் (2011), செ.தீபக்ராஜா (2012), ச.சிவசுப்பிரமணியன் (2013), இரா.விஷ்வா (2015), ஆ.பாஸ்டின் ஜோயல் (2016) ஆகிய மாணவர்கள் மாநில அளவில் சுட்டிவிகடன் மாணவ நிருபர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வீரமாமுனிவர் கலை இலக்கியமன்றச் செயலரை பொறுப்பாசிரியராகக் கொண்டு ‘சுழல்’ என்னும் சிற்றிதழ் ஆசிரியர்களால் நடத்தப்பெற்றது. அதனை முன்னோடியாகக் கொண்டு மாணவர்களும் சிற்பிகளின் விதை, பேனா முனை, சமூகமே எந்திரி ஆகிய இதழ்களை நடத்தினர். இலக்கியப் போட்டிகள் இல்லாத காலத்திலும் அதற்கான தயாரிப்புகளைத் தொடர்ந்து வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் செய்து வருகிறது, (புதியதலைமுறை 02.10.2014, ப.62,63) இதனைப் பாராட்டி இலக்கிய மன்றச் செயலர், மாணவப் பத்திhpகையாசிரியர்களின் நேர்காணலை புதியதலைமுறை வார இதழ் ‘ஏடு கொண்டானடி பள்ளியிலே..’ என்னும் இருபக்கக் கட்டுரையாக வெளியிட்டது.
சுழல் இதழில் மாணவர்களின் படைப்புகளுக்கு தனியிடம் ஒதுக்கியிருப்பது குறித்து ‘மாணவர்களின் படைப்புகளுக்கு ‘சுழல்’ களம் அமைத்துத் தருவது வரவேற்கத்தக்கது’ (குங்குமம், 29.10.2012, ப.84) என்று குங்குமம் இதழ் பாராட்டியுள்ளது.
‘காக்கைச் சிறகினிலே..’ இலக்கிய இதழ் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் இதழ்ப் பணிகளைப் பாராட்டி மூன்று பக்கங்களில் ‘வீட்டுக்கு ஒரு மரம், பள்ளிக்கு ஒரு இதழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. (காக்கைச் சிறகினிலே, சனவரி 2014, ப.3-6)
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் செயல்பாடுகள், நூல் வெளியீடுகள், இதழ்ப்பணி, மொழிவள ஆய்வு மையம் குறித்து எழுத்தாளர் வி.சி.வில்வம் ‘உண்மை’ மாத இதழிலும் தம் நூலிலும் கட்டுரை எழுதியுள்ளார் (கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்க, கியு+பா பதிப்பகம், ப.20-23)
பேச்சுக்கலை:
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், வலம்புரி ஜான் உள்ளிட்ட மறைந்த தமிழறிஞர்களின் உரைகளையும், வாழும் தமிழஞர்களின் பேச்சுகளையும் குறுவட்டு மூலம் மொழிவள ஆய்வு மையத்தில் மாணவர்களைக் கேட்கச் செய்து பயிற்சியளிக்கிறது இவ்விலக்கிய மன்றம்.
பேச்சுக்கலையின் முக்கூறுகளான எடுத்தல், தொடுத்தல், முடித்தல் ஆகியவற்றில் திறனை வளர்த்துக் கொள்ள பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாநில அளவிலான தேம்பாவணி பேச்சுப் போட்டியில் மு.இராகவேந்திரன், இரா.விஷ்வா ஆகியோர் முதலிடம் வென்றுள்ளனர். சன் தொலைக்காட்சியின் ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சியில் இருவர், ராஜ் தொலைக்காட்சியின் ‘அகட விகடம்’ நிகழ்ச்சியில் நால்வர், கலைஞர் தொலைக்காட்சியின் ‘நல்லாப் பேசுங்க… நல்லதையே பேசுங்க..’ நிகழ்ச்சியில் இருவர், கேப்டன் தொலைக்காட்சியின் ‘அசத்தல் அரங்கம்’ நிகழ்ச்சியில் இருவர், ஜெயா தொலைக்காட்சியின் ‘மக்கள் அரங்கம்’ நிகழ்ச்சியில் ஒருவர் என மாணாக்கர் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பண்பாடு, கலைகளுக்கு அரண் சேர்க்கும் வகையில் பேசியுள்ளனர். (காண்க: https://www.youtube.com/channel/UClgEtYEXYNMhIyFcz-eTSKA)
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் மாநில அளவில் சிறப்பாகப் பேசி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இரா.மணிகண்டன் என்னும் கலை இலக்கியமன்ற மாணவர் பாராட்டு பெற்றுள்ளார். (முரசொலி, மதுரை 08.02.2016, ப-9) கவியரசர் முடியரசனார் அவைக்களம் நடத்திய மாவட்ட பேச்சுப் போட்டியிலும், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி நடத்திய மாநிலப் போட்டியிலும், தமிழ் வளர்ச்சித்துறை மாவட்ட பேச்சுப் போட்டியிலும் இவ்வாண்டு (2016) முதல் பரிசு வென்றுள்ளனர்.
நூல் வெளியீடுகள்:
* மேடை நமதே..(அரியவை நூறு:தொகுப்பு நூல்) - திரு.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
*சுழல் சிற்றிதழ்- தே பிரித்தோ மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் (பொறுப்பாசிரியர்-திரு.ம.ஸ்டீ பன் மிக்கேல் ராஜ்)
*உளிகள் வடித்த துளிகள்(கட்டுரை நூல்)- தே பிரித்தோ மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள்(பொறுப்பாசிரியர்- கவிஞர்.L.பிரைட்)
*சமூகமே எந்திரி- பதினோராம் வகுப்பு மாணவர்களின் சிற்றிதழ்
*பேனா முனை- பத்தாம் வகுப்பு மாணவர்களின் சிற்றிதழ்
*வேர்களே விழுதாகி.. - அருட்திரு.Y.S.யாகு சே.ச (மேனாள் தலைமையாசிரியர் & வீரமாமுனிவர் கலை இலக்கியமன்றத் தலைவர்)
*பாப்பா பாடும் பாட்டு (குழந்தைப் பாட்டிலக்கிய நூல்)- கவிஞர் L.பிரைட் (பட்டதாரி அறிவியல் ஆசிரியர்) சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசை அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் பெற்ற நூல்.
*மாடல்ல மற்றை யவை..( சிறுகதை நூல்)- திரு.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (16 கதைகளுக்கான ஓவியங்களும், அட்டைப்படமும் இலக்கிய மன்ற மாணவர்களால் வரையப்பட்டவை)
கலை விருதுகள்:
மாநில அளவிலான கலைத்திறன் சாதனைகளுக்காக சேலம் இலக்கிய அமைப்பு ‘கலைச் சுடர்’, ‘நட்சத்திர ஆசிரியர்’ விருதுகளை வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றச் செயலர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் அவர்களுக்கு கலைமாணி எஸ்.பி.முத்துராமன், தேசிய விருதாளர் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் ஆகியோர் மூலம் வழங்கி கௌரவித்துள்ளது (கல்விடுடே, ஆகஸ்டு 2015, ப.37). இதே போன்று 23.10.2016 அன்று மதுரையில் டாக்டர் அப்துல்கலாம் கனவு வளர்ச்சி அறக்கட்டளையினர் கலாம் பிறந்த நாள் விழாவில் இம்மன்றத்தின் கலைப் பணிகளைப் பாராட்டி மன்றச் செயலருக்கு ‘கலாம் கனவு ஆசிரியர்’ விருதினை வழங்கியுள்ளனர்.
முடிவுரை:
மேற்கத்திய கலாச்சார மோகத்தில் மூழ்கி விடாமல் நமக்கேயுhpத்தான பழம்பெருமைகளை பண்பாட்டுச் செழுமையை, கலைச் செல்வங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பினை பள்ளிக் கூடங்கள் ஏற்றுக் கொண்டு, மாணாக்கர் உள்ளத்தில் பதியச் செய்ய வேண்டும். வருங்கால சந்ததியினரான மாணாக்கர் தமிழர் மரபையும், பண்பாட்டையும், கலைகளையும் காப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல ஆயத்தப்படுத்த வேண்டும். அதற்கு ‘வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்’ போன்ற கலை இயக்கங்கள்; ஒவ்வொரு பள்ளியிலும் வளர்ந்து செழித்தோங்கிடவேண்டும்.

*சுழல் சிற்றிதழ்- தே பிரித்தோ மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் (பொறுப்பாசிரியர்-திரு.ம.ஸ்டீ
*உளிகள் வடித்த துளிகள்(கட்டுரை நூல்)- தே பிரித்தோ மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள்(பொறுப்பாசிரியர்-